தைப்பொங்கல் தினத்தில் இரவு நேரத்தில் கோர விபத்து…!ஸ்தலத்தில் பலியான கூலித் தொழிலாளி….!!

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின், சித்தாண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தரான, கூலித் தொழிலாளியொருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த விபத்து தைப்பொங்கல் தினமான நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் சித்தாண்டி, உதயன்மூலை மதுரங்காட்டுக் கொலனியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான பொன்னம்பலம் தியாகராசா (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் பிரதான வீதியில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, தூர பிரதேச போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்தொன்று துவிச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.மேலும், சம்பவம் தொடர்பில் தனியார் பேருந்தின் சாரதியை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles