தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்ட வயோதிபர் பரிதாபமாக மரணம்…!! யாழில் சோகம்…!

தனக்கு தானே தீ மூட்டினார் என எரிகாயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், தாவடி தெற்கை சேர்ந்த வீரசிங்கம் கனகதுரை (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த வயோதிபர் பிள்ளைகள் இன்றி தனியாக வசித்து வந்ததாகவும், அந்நிலையில் நேற்று புதன்கிழமை தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார் எனவும், அதனை அவதானித்த தாம் தீயினை அணைத்து வயோதிபரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையிலேயே குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles