ஆயுதங்களுடன் இளைஞன் கைது!

சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

பளை, கரந்தாய் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்றைய தினம் அவ்வீட்டினை அவர்கள் சோதனையிட்டனர்.

இதன்போது, ஒரு தொகுதி ஆயுதங்களை அவர்கள் மீட்டதுடன் வீட்டிலிருந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்காக வவுனியா பொலிஸ் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் கொண்டு சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles