மட்டகளப்பில் நிகழ்ந்தேறிய உச்சகட்ட கொடூர சம்பவம்… அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

வீதி ஓரத்தில் அநாதரவாக வீசப்பட்டுக் கிடந்த இரண்டரை மாத வயதுடைய பெண் சிசுவொன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமக்குக் கிடைத்த தகவலொன்றையடுத்து கிரான் முருகன் கோயில் வீதிக்குச் சென்றபோது அங்கு வீசப்பட்டுக் கிடந்த கைக் குழந்தையைத் தாம் மீட்டெடுத்து உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு சுமார் 9 மணியளவில் இக் குழந்தை வீசப்பட்டிருக்கலாம் என விசாரணைகளின்போது பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles