தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரி! பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இலங்கை இராணுவ பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவிற்கு பிரித்தானியா Westminster நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

பொது ஒழுங்கு சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டத்தின் 5 மற்றும் 4A பிரிவுகளை மீறி பொது மக்களை அச்சுறுத்தியமை மற்றும் அவரது செயல் துன்புறுத்தும் வகையில் காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டனில் கடந்த வருடம் குறித்த பிரிகேடியர் இராணுவ சீருடை அணிந்து கழுத்தில் கத்தியை வைத்து, தமிழ் மக்களின் கழுத்தை வெட்டுவிடுவேன் என்பதனை போன்ற சமிக்ஞை காட்சியதாக சட்டதரணி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் உரிய முறையில் இதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், லண்டனில் உள்ள இலங்கை உயர் ஆணையர் நீதிமன்றத்திற்கு முன்பாக வரவழைக்கப்படுவார் என அந்த பிடியாணை உத்தரவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles