முல்லைத்தீவில் முக்கிய அறிவிப்பு!! வடக்கு ஆளுநர் பெருமிதம்..

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு முல்லைத்தீவில் இடம்பெறுவது தமிழர்களாகிய எமக்கு மதிப்பான விடயமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த திட்டம் வெறுமனே போதைப்பொருளை தடுப்பதற்காக மட்டுமல்லாது, தேசத்தை கட்டியாளக்கூடிய கட்டாயம் எமக்குள்ளது.

தமிழ், முஸ்லிம், சிங்களம் என பல இன மக்கள் இலங்கையில் வாழ்கின்றோம். அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்.

இது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறும் சம்பவம் என கூறப்படுகிறது.