வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

நேற்றைய தினம் வலி.வடக்கில் இராணுவத்தினால் காணிகள் விடுவிக்கப்பட்டது.

நேற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தாம் பாவித்த வீடுகளில் மலசலகூடங்களைக் கூட இராணுவத்தினர் விட்டு வைக்காது எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

வலி. வடக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்திருந்த 19.64 ஏக்கர் காணி நேற்று விடுவிக்கப்பட்டது.

25 வீடுகள் மக்கள் பாவனைக்கு நேற்று மீண்டது. தமது வீடுகளை ஆவலாகப் போய்ப் பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இராணுவத்தினர் மக்களின் வீடுகளை இதுவரை பயன்படுத்தியிருந்தனர்.

இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் பெறுமதியான கூரைகளை வீட்டுக்குப் போட்டிருந்தனர்.

இராணுவத்தினர் அதனை அகற்றிவிட்டு பெறுமதி குறைந்த கூரைகளை, வடிவங்களை மாற்றிப் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும், தாம் பாவித்த வீடுகளின் மலசலகூடங்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளனர்.

வீடுகளிலிருந்து பெறுமதியான பொருள்களையும் இராணுவத்தினர் கழற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.