மட்டக்களப்பில் அரச ஊழியர் செய்த மோசமான செயல்!

மட்டக்களப்பில் எழுந்து நடக்க முடியாத படுக்கையில் இருக்கும் வயோதிப தாயை வரவழைத்த அரச பெண் ஊழியரின் மனிதாபிமானம்மற்ற செயலை சமூக வலைதளத்தில் சமூக வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இச்சம்வபம் குறித்து சமூக வாசகர் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் இருக்கும் வயோதிப தாயை ஒருவர் அவருடையே முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ளவதற்காக சித்தாண்டியிலிருக்கும் தபால் நிலையத்திற்கு அவரது உறவினர்கள் அழைத்துவந்துள்ளனர்.

இதேவேளை இதற்கு முன் குறித்த வயோதிய தாயின் மகள் தாயாரின் தற்போதைய நிலையை எடுத்துக்கூறி முதியோர் கொடுப்பனவை தன்னிடம் தந்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஏற்க மறுத்த தபால் ஊழியர் குறித்த நபர் வருகை தந்தால் மாத்திரமே பணம் கிடைக்கும் இல்லையேல் தரமுடியாது என காத்திரமாக கூறியுள்ளார்.

மேலும் குறித்த பெண் மீண்டும் மீண்டும் அவருடைய தாயரின் தற்போதைய நிலையை எவ்வளவோ எடுத்துக் கூறியும் தபால் நிலைய ஊழியர் அதை ஏற்க மறுத்துள்ளார். தபால் நிலைய ஊழியர் கூறுகையில் குறித்த நபர் கூரிய இடத்திற்கு வந்தால மட்டுமே கொடுப்பனவு கிடைக்கும் என விடாப்பிடியாக கூறியுள்ளார்.

இதன்பின்னே உடல்நிலை முடியாமல் இருக்கும் வயோதிப தாயாரை அழைத்துக்கொண்டு முதியோர் கொடுப்பனவைப் பெற்று கொள்ளவதற்காக தபால் நிலையத்திற்கு வந்து முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து சமூக வாசகர் கருத்து தெரிவிக்கையில், தபால் நிலைய ஊழியர் ஒரு பெண்ணாக இருந்தும் கூட எவ்வளவு கீழ்த்தரமானதும் மனிதாபிமானமற்றதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார் என்பதை இதுபோன்ற செயற்பாடுகள் மூலம் தெரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனினும் இதுபோன்ற இன்னும் ஒரு செயற்பாடு எதிர்காலத்தில் எமது உறவுகளுக்கு நேர்ந்துவிடக் கூடாது எனவும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் உயர் அதிகாரிகளை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். என தெரிவித்துள்ளார்.

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

உலகம்

Latest Articles