முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
இன்றைய தினம் அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ என்பவரையே ரோஹித ராஜபக்ச திருமணம் செய்துள்ளார்.
ராஜபக்சவின் குடும்ப கிராமமான வீரக்கெட்டியவில் பெரியோர்களின் ஆசிர்வாதத்துடன் ரோஹிதவின் திருமண நிகழ்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
வேறு அரசியல்வாதிகளின் வாரிசுகளின் திருமணம் போன்று 5 நட்சத்திர ஹோட்டல்களில் இந்த திருமண வைபவம் நடத்தப்படவில்லை. மிகவும் எளிமையான முறையில் வீரக்கெட்டிய கிராமத்தில் மெதமுல வீட்டில் திருமணம் நடைபெற்று வருகிறது.
திருமணத்திற்கு வழங்கப்படும் உணவுகள் உள்ளூர் உணவுகளாகும். அயல் வீட்டவர்களினாலேயே திருமணத்திற்கான உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாட்டிற்கு பகிரங்கப்படுத்தாமல் மெதமுலன கிராம மக்களுக்கு மாத்திரம் திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு வருபவர்களுக்கு ரணவரா இலைகள் மற்றும் விளாம்பழம் கொண்டு தயாரிக்கப்பட்ட பாணமே வழங்கப்பட்டுள்ளது. மட்பாண்டங்களை கொண்டு இந்த திருமண உணவுகள் சமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விசேட அம்சமாகும்.
இந்த திருமணத்திற்கு எவ்வித இறைச்சி வகைகளும் பயன்படுத்தப்படவில்லை. திருமண அலங்கரிப்புகள் உட்பட அனைத்து அலங்கரிப்புகளும் சுற்றாடலுக்கு நெருக்கமான பொருட்கள் கொண்டே தயாரிக்கப்படவுள்ளது.
அத்துடன் இந்த திருமண வைபவத்தில் எவ்வித மதுபானங்களும் பயன்படுத்தாமல் மிகவும் எடுத்துக்காட்டான ஒரு திருமணமாக நடத்தப்படவுள்ளது.
ரோஹிதவின் மூத்த சகோதர்களான நாமல் மற்றும் யோஷித ஆகியோர் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் வீட்டின் கடைசி மகன் திருமண பந்தத்தில் இணைந்திருப்பது சகோதரர்களை ஏங்க வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.






