கடந்த 10ம் திகதி கர்த்தால் போன்று இன்றைய தினம் கர்த்தால் சோபிக்காத எண்ணி அதே நேரம் கர்த்தால் தாக்கம் இம்முறை மட்டக்களப்பின் மூன்று தேர்தல் தொகுதியான கல்குடா,மட்டக்களப்பு,பட்டிருப்பு கொண்ட கிராமங்களில் அதிகாலை அம்பாரை தொடக்கமான பெரிய கல்லாறில் இங்கால ஒருவரும் அசைய கூடாது மீறினால் விளைவு மோசம் என்பதை கருத்தில் கொண்டவர்கள் அம்பாரை பகுதி வாகனம் முடக்கப்பட்டது.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தையும் திருகோணமலை ,பொலனறுவை ,பதுளை,மாவட்டங்களை இணைக்கும் கல்குடா தொகுதியில் பெரிதாக கர்த்தால் சோபிக்காது எனும் கனவுடன் ஏறாவூர் ,ஓட்டமாவடி முஸ்லிம் போக்குவரத்து முகாமையாளர் வீர வசனத்தை நம்பி வீணாக பேருந்தை இயக்கிய வாழைச்சேனை தமிழ் சாரதியான திருச்செல்வம் வந்தாறுமூலையில் வைத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளார்,
பஸ்ஸின் சாரதியான திருச்செல்வம் தலையில் காயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையிலும், பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.






