யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் மூவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 கிலோ கஞ்சாவுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.






