கண்டி – கொட்டப்பொல பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது.
கண்டியிலிருந்து – கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஹெலிஓயாவிற்கும் பேராதனைக்கும் இடைப்பட்ட கொட்டப்பொல பகுதியிலே தீப்பிடித்துள்ளது.
பஸ்ஸில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






