வவுனியா கோவில்புதுக்குளம் மகா விஸ்னு ஆலயத்தில் இன்று இடம்பெறவிருந்த திருட்டுச் சம்பவம் பொதுமக்களால் முறியடிக்கபட்டுள்ளது.
குறித்த ஆலயத்தில் இன்று அதிகாலை 1 மணியளவில் நான்கு பேரைக் கொண்ட குழுவினர் ஆலயத்தின் வாசல்பகுதியூடாக உள்நுழைந்துள்ளனர். அதனை அவதானித்த ஆலயத்தின் காவலாளி ஓடிசென்று ஆலயத்தின் மணியை அடித்துள்ளார். இதனால் அருகில் இருந்த பொதுமக்கள் ஆலயத்துக்குள் ஒன்று கூடினர்.
இதனால் செய்வதறியாத திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் குற்றதடுப்பு பிரிவில் ஆலயத்தின் நிர்வாகத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.






