வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருதொகை கஞ்சா வைத்திருந்த 3 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கடற்படையினரும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை (26) வல்வெட்டித்துறைப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கைப்பற்றியுள்ளதுடன், மூவரைக் கைதுசெய்துள்ளனர்.
புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த இருவரும், வல்வெட்டித்துறைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் இணைந்து விற்பனைக்காக வைத்திருந் வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் கைது செய்த நபர்களையும் பருத்தித்துறை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் முன்னெடுத்துள்ளனர்.






