யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள்!

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவுடன் சம்பந்தப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் கிடைத்த தகவலை அடுத்தே இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பபட்டவர்கள் 19, 23 மற்றும் 25 வயதான இளைஞகர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாச்சியம்மன் கோவிலடி பகுதியில் இரண்டு பேரை வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் பின்னர், சந்தேக நபர்கள் தப்பிச் சென்று தலைமறைவாகி இருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நாளைய தினம் அடையாள அணி வகுப்பில் நிறுத்தப்படவுள்ளனர்.

இதற்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.