சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு வேட்டையாடிய நபர் ஒருவரை நேற்று 26 ஆம் திகதி பிட்டபெத்தர பொலிசார் கைது செய்துள்ளனர்.
மாத்தறை தெதியகல வன பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு மிருகங்களை வேட்டையாடிவருவதாக பிட்டபெத்தர ரகசிய பொலிஸ் பிரிவிற்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து அகுரஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குபட்ட லேனம பலபத்எல்ல பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபரை பிட்டபெத்தர் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதசெய்யப்பட்டவர் 37 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையாகிய இவர் கடையன் துப்பாக்கியை ரவை துப்பாக்கி போன்று அமைத்து வைத்திருந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த துப்பாக்கி ரவைத் துப்பாக்கி போல் அமைக்கப்பட்டிருந்தமையினால் அதனால் திடீர் திடீர் என சுடுவது இலகுவாக இருக்கும் என கூறிய பொலிஸார் குறித்த சந்தேகி அதனை அதற்கேற்ப மாற்றிய விதம் அதிர்ச்சியளிக்கும் விதமாக இருந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை மொறவக்க நீதவான் சசிகா மிதுனாராச்சி முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.






