பருத்தித்துறை, வியாபாரிமூலை பகுதியில் கட்டிட கூரை ஒன்றின் மீது காயவிடப்பட்டிருந்த 86 கிலோக்கிராம் கேரளக் கஞ்சா கைப்பெற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை, வியாபாரிமூலை பகுதியில் கஞ்சா உலரவிடப்படுள்ளதாக கடற்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து இன்று மதியம் பருத்தித்துறை பொலிஸாரின் உதவியுடன் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கட்டிட கூரையில் நனைந்த நிலையில் உலரவிடப்பட்டிருந்த 86 கிலோ கஞ்சாவை மீட்ட பொலிஸார் அவற்றை பொலிஸ் நிலையத்தில் உலரவிட்டுள்ளனர்.
உலர்ந்த பின்னரே அதன் நிறை தெரியவரும். இது தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.






