கட்டுநாயக்காவில் ஜேர்மன் யுவதிக்கு நேர்ந்த துயரம்! தப்பிய சுவிஸ் சந்தேக நபர்

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட ஜேர்மன் யுவதியை வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்ட சுவிஸ் பிரஜை 5 லட்சம் ருபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயண பொதிகள் பிரிவில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெளிநாடு செல்ல நீரகொழும்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மூல அன்ரியாஸ் என்ற 50 வயதான சுவிஸ் பிரஜையே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ரின்லின்ஜன் கெயிஸ்ரா என்ற 25 வயதான ஜெர்மன் யுவதியே துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இலங்கைக்கு வந்த குறித்த யுவதி தனது பயணப்பொதியை எடுப்பதற்காக சென்றபோது சுவிஸ் பிரஜை வலுக்கட்டாயமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக யுவதியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 21 ம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுவிஸ் பிரஜை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இதனையடுத்து, நேற்று வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த நபர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

மேலும் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 31 ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.