கடற்படையினரின் துப்பாக்கி சூடு! திருகோணமலையில் பதற்றம்

திருகோணமலைவில் இன்று முற்பகல் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

திருகோணமலைவில் – கிண்ணியா, கங்கைப் பால கீரைத் தீவு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடற்படையை சேர்ந்தவரொருவர் மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவரை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த நிலையில் அவர்களில் இருவர் கடலில் பாய்ந்துள்ளதாக தெரியவருகிறது.

கடலில் பாய்ந்து காணாமல் போன இரு இளைஞர்களும் கிண்ணியா, இடிமன் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது.

காணாமல்போனவர்களை தேடும் பணியில் பொது மக்களுடன் சேர்ந்து கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றது.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவ இடத்துக்கு பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ருப் மற்றும் அவரின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்டோர் உடனடியாக விரைந்துள்ளனர்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.