யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, தாக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த பகுதியில் ஏற்கனவே இவ்வாறு பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த போது, பெண் நபரது கையைக் கடித்து விட்டுத் தப்பித்தார்.
கடத்த முயற்சித்த நபரது மோட்டார் சைக்கிள் இலக்கத்தை கிராம மக்கள் அவதானித்துள்ளனர்.
இன்று அதே இடத்துக்கு வருகை தந்த நபரை மடக்கிப் பிடித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.






