பேஸ்புக் பயனாளர்களுக்கு இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் ஊடாக இணைய பண பரிமாற்ற மோசடி இடம்பெற்று வருவதால் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்குள் குறித்த மோசடி தொடர்பில் 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.






