சமாதானம் வேண்டி இலங்கையைச் சுற்றி பயணித்துள்ள மாற்றுத்திறனாளி!

இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி முச்சக்கர தள்ளு வண்டியில் இலங்கையைச் சுற்றி வருவதற்காக மாற்றுத் திறனாளி ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் சேர்ந்த மௌஹமட் அலி என்ற இளைஞரே இந்த பயணத்தினை ஆரம்பித்துள்ளார்.

தமிழ் மாற்று திறனாளிகள் அமைப்பின் ஒழுங்கமைப்பில் மேற்படி பயணம் இன்று காலை 9 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில் கொழும்பு நோக்கி செல்லும் குறித்த இளைஞர் கொழும்பிலிருந்து தென்மாகாணத்துக்கும் அங்கிருந்து கிழக்கு மாகாணத்திற்கும் பயணித்து திருகோணமலை ஊடாக முல்லைத்தீவுக்கு சென்று பின்னர் அங்கிருந்து பரந்தன் பகுதிக்கு வந்து இறுதியில் யாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளார்.

இந்த பயணத்தின் மூலம் இலங்கையில் சமாதனம் மற்றும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்பன உருவாக்கப்படவேண்டும் என்றும் மாற்றுத் திறனாளிகளின் அடிப்படை உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.