யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அதிகளவான கஞ்சா கடந்த சில தினங்களாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘ஒப்பரேசன் கஞ்சா’ நடவடிக்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக வடக்கு மாகாணத்தின் வேறு மாவட்டங்களிலிருந்து 100 பொலிஸார் களமிறக்கப்படவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு இரகிசயத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘ஒப்பரேசன் கஞ்சா’ நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.






