கம்பஹா – நய்வல பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் ராட்டினம் உடைந்து வீழ்ந்ததில் தாய் உயிரிழந்துள்ளதுடன், மகள் காயமடைந்துள்ளார்.
ராட்டினத்தில் உள்ள ஒரு அமரும் பகுதி உடைந்து வீழ்ந்து இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர் சியம்பலாபிட்டி – கொட்டுகொட பகுதியை சேர்ந்த பெண் என தெரியவந்துள்ளது.விபத்தில் காயமடைந்த 13 வயது சிறுமி கம்பஹா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.






