வெளிநாட்டு ஆசைக்காட்டி இலங்கையர்களுக்கு பெண் செய்த காரியம்!

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கோரி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் ஹொரனை – மீமன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 69 வயதுடைய அதே பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் சந்தேக நபர், நியூசிலாந்தில் தொழில்வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி நபர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 95 லட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை 40 கடவுச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.