யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கூரையைப் பிரித்து வீடு புகுந்து திருடர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப் பகுதியிலுள்ள வீட்டில் நேற்றுமுன்தினம் முற்பகல் இடம்பெற்றது.
கணவன் மனைவி இருவரும் பணிநிமித்தம் வெளியே சென்று பிற்பகல் 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.
இதன்போது திருட்டு இடம்பெற்றுள்ளதைக் கண்டனர். இது குறித்து மானிப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.






