இலங்கையில் வெளிநாட்டவர்கள் செய்த மோசமான செயல்!

கந்தானை ரயில் நிலையத்திற்கு அருகில் இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

90 கிராம் 798 மல்லி கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

குறித்த நபர்கள் சுற்றுலா வீசா ஊடாக இலங்கைக்கு வந்து கொக்கேய்ன் வர்த்தகத்தில் ஈடுட்டிருந்தமை தெரியவந்துள்ளது.