யாழ் மக்களுக்கு நீதிபதி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

நீதிமன்றத்திற்கு சமூகமளிக்கும் சந்தேகநபர்கள் ஒழுக்க விழுமியங்களைக் கடைப்பிடிக்க தவறினால், விளக்கமறியலில் வைக்கப்படுவரென யாழ்ப்பாண நீதிமன்ற நீதவான் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம்-நல்லூர், முடமாவடியில் வீடுகளை அடித்து உடைத்தமை, வாள்வெட்டில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்கு யாழ். நீதிமன்றில் நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் முன்னிலையாகிய சந்தேகநபர்கள் நேர்த்தியாக ஆடையணியாது, ஒழுக்கமற்று காணப்பட்டனர்.

இதனையடுத்து, இனிமேல் இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்றத்திற்கு வரும் சந்தேகநபர்கள் நேர்த்தியாக ஆடை அணிந்து, ஒழுக்கமாக சமூகமளிக்க வேண்டுமென நீதவான் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒழுக்கமற்ற முறையில் சமூகமளித்தால் விளக்கமறியலில் வைக்கப்படுவீர்கள் என்றும் எச்சரித்துள்ளார்.