இலங்கையில் மீண்டும் ஓர் அபாயம்!!எச்சரிக்கை மக்களே

இலங்கையில் மீண்டும் ஓர் அபாயம்!!எச்சரிக்கை மக்களே

முல்லைத்தீவில் காய்ச்சால் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் உள்ள விசுவமடு, பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
எம்.சதீஸ்குமார் என்பவரே காய்ச்சால் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை இறந்துள்ளார்.
இந்த மரணத்திற்கு எலிக்காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே கீழ் குறிப்பிடப்படும் அறிகுறிகள் காணப்படும் போதும் உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி சுகாதார துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எலிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகளாக காய்ச்சல், உடல் உளைச்சல், அல்லது உடல் நோதல், தலையிடி, உடல் களைப்பு, அல்லது உடல் அலுப்பு, போன்ற அறிகுறிகளுடன் கண் சிவத்தல், சத்தி (வாந்தி) கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல் ஆகிய நோய் அறிகுறிகள் இருக்கலாம்.
ஆனால் சில நோயாளிகளுக்கு எந்தவொரு குணம் குறியும் தென்படாது. எனவே உடனடியாக வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சையை பெறவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like