காணாமல் போன குழந்தையை தேடியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! வவுனியாவில் நடந்த சோகம்

வவுனியா – சிதம்பரபுரம் பகுதியில் கிணற்றொன்றில் இருந்து குழந்தையொன்றின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6 வயதுடைய குழந்தையின் சடலமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வவுனியா , சுந்தரபுரம் பிரதேசத்தை சேர்ந்த இந்த குழந்தை நேற்று மாலை தமது பெற்றோருடன் வவுனியா , சிதம்பரபுரம் பிரதேசத்தில் அமைந்துள்ள உறவினரொருவின் வீட்டுக்கு சென்றுள்ள போது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

குழந்தை நேற்று முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி , முறைப்பாட்டை ஏற்று குழந்தையை பொலிஸார் தேடிய போது குழந்தையின் சடலம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

குழந்தையின் சடலம் வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சடலம் தொடர்பிலான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like