சுவிற்சர்லாந்து இந்து ஆலயம் ஒன்றில் நடந்த வேதனையான விடயம்

சுவிற்சர்லாந்து செங்காளனில் உள்ள சென்மார்க்கிறேத்தன் என்னும் இடத்தில் அமைந்துள்ள கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் கதவினை கால்களினால் உதைத்தும், திருமுறைகள் பாடவேண்டிய சந்நிதானத்தில் பல தகாத வார்த்தைகளையும் அங்கு வந்த கும்பல் ஒன்று மேற்கொண்டுள்ளது.

குறித்த ஆலயத்திற்கு மாத சந்தாநிதி செலுத்துபவர்களுக்கான கூட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை முற்பகல் நடைபெற்றுள்ளது.

இதன்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஆலயத்திற்கு எதிரான கும்பல் ஒன்று அங்கு வந்து பல அட்டகாசங்களையும், அவதூறான வார்த்தைப் பிரயோகங்களையும் பிரயோகித்து ஆலயத்தின் கதவை காலால் உதைத்தும் பல அட்டூழியங்களை புரிந்துள்ளார்கள். இவர்கள் இப்படி நடப்பதற்கு ஒரு காரணமும் உள்ளதாக அறியக் கிடக்கிறது.

இப்படியான செயற்பாடுகளின் மூலம் ஆலயத்தைக் கைப்பற்றி தாங்கள் நடாத்தி, தங்களையும் ஒரு தர்மகர்த்தா, அறங்காவலர்கள், ஆன்மீகவாதிகள் போன்றுமாயையை மக்கள் மத்தியில் உருவாக்கி ஒருசமுதாய அந்தஸ்த்தைதங்களுக்கு உருவாக்க முனைவதாககருதுவதற்கு காரண கைங்கர்யங்களும் உள்ளன.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்ற பெருமையைபல்லாண்டுகளாக பேசி வருகின்ற தமிழினத்தில் இப்படியான கீழ்த்தரமான, அடிமட்டமான, ஈனசெயல்களை செய்பவர்களும் வாழ்கிறார்கள் என்பதை பார்க்கும்போது உள்ளம் அருவருப்படைகின்றது.

பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் வாக்கின்படி ‘இன்னாசெய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம்செய்து விடல்’ என்றுகுறள் சொல்வதாகவும் மேடைகளில் முழங்குகிறார்கள்.

அதாவது ஒருவர் தவறுசெய்திருந்தாலும் கூட அவர்நாணும்படியாகஅவருக்குநன்மையே செய்ய வேண்டும் என்று குறள்கூறுகின்றது.

‘இதுவெல்லாம்ஊருக்கு தான் உபதேசம் உனக்கல்ல என்ற எதிர்மறை கருத்துலகத்தில்தான்வாழ்கிறார்க்ள என்ற அர்த்தத்தையும்நாம் புரிந்த கொள்ளாமல் இருக்கவும் முடியாது. நாம் எல்லோரும் எங்கள் தாயகத்தில் இனி வாழவே முடியாது.

ஏதாவதுஅந்நிய நாட்டிற்கு அகதியாய்ப்போய் அங்கே உயிர் வாழலாம் என்ற நோக்கத்தில் தாயகத்தை விட்டு அகதியாக ஓடி வந்தவர்கள் என்பதைநினைத்துப் பார்க்க வேண்டும்.

அகதியாக தஞ்சம் புகுந்த நாட்டில் நமக்குள் நாமே எதிரியாகி மனசஞ்சலங்களையும், உயிர்அச்சுறுத்தல்களையும்இ தொலைபேசியில் மிரட்டுவதும்போன்ற செய்கைகளுக்கு எவ்விதத்தில் இவர்கள் நியாயம்கற்பிக்கப் போகின்றார்கள்.?

ஆலயத்தின்திருக்கதவை காலால் உதைத்தவர்கள் எவ்வாறு ஆலயத்தின் காவலாளிகளாக இருக்க முடியும்? கேட்கவே அருவருக்கத்தக்க கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுகின்ற இவர்கள் எவ்வாறு ஆலயத்தில்திருமுறைகளைஓத முடியும்? மக்களே நன்றாகவும் நிதானமாகவும் சிந்தியுங்கள்.

இப்படிப்பட்டவர்கள்சமுதாயத்தில் நற்பிரஜைகளாக திருந்துங்கள் அல்லது ஓரமாக அமைதியாக இருங்கள். மீண்டும் வள்ளுவனை இங்கு அழைக்கின்றேன்

‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் பேசா திருக்கப் பெறின்’

அதாவதுகல்லாதவர்கள் நல்லமனிதர்களாக இருக்க வேண்டுமானால் கற்றவர்கள் மத்தியில் அமைதியாக இருந்துவிட்டாலேபோதுமானது என்று குறள்சொல்லுகின்றது.

மீண்டும் ஆலய வாசலின் செய்திகளுக்கு செல்வோம். இப்படியானசெய்கைகளை, வர்கள்நடாத்திக் கொண்டிருக்கையில் மழைத்தூறல்களுக்கு நடுவிலேயும் அக்கம் பக்கத்தில் உள்ள சுவிஸ் நாட்டு பிரஜைகளும், ஏனைய நாட்டினரும்தங்கள் வீட்டுசாளரம் ஊடாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இப்படிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கையில் உள் மண்டபத்தில் உள்ளவர்களுக்கு ஆலயத்தின் வரவுஇ செலவு அறிக்கை மிகஒழுங்கான முறையில்துல்லியமாக சமர்பிக்கப்பட்டுஅவர்களின் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும்மிகத் தெளிவான முறையில் விளக்கங்கள் அளிக்கப்பட்டதாக அறிகின்றோம்.

ஆகவே எதிர் தரப்பினரும் அமைதியான முறையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருபார்களாயின் அவர்களுக்கு நல்ல சுமூகமான தீர்வுகள் கிடைத்திருக்க முடியும்.

ஆலய வாசலில் காவலாளியை நியமித்ததற்கு காரணமும் உண்டு. இதற்கு முன்னர் நடைபெற்ற கூட்டங்களில் ஒரு சில அத்துமீறல்களும், அடாவடித்தனங்களும்ஏற்பட்டபடியினால் இம்முறைபாதுகாப்பு கருதி அமைதியை கடைபிடிப்பதற்கு ஆலய நிர்வாகத்தினர் காவலாளியை நியமித்திருந்தார்கள்.

இச்செயல்களை சகிக்க முடியாமலும்நிலைமை கட்டு கடங்காமலும் போகவே ஒரு சிலரால்சுவிஸ் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், காவல் துறையினர் மின் விளக்குகள் ஒளி வீசிய வண்ணம்இ அபாயஒலி எழுப்பிக்கொண்டும்அங்கு வந்து நிலைமையை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள்.

மற்றவர்களுக்கு மனதால் கூட தீங்கு செய்யாதீர்கள் என்றுஎங்களுடைய மதம் சொல்லுகின்றது. எங்களுக்கு உயிர் பிச்சை தந்து அடைக்கலம்தந்த நாட்டினருக்கு நாம் தொந்தரவாக இருக்கலாமா?

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றிகொன்ற மகற்கு’

ஒருவர் செய்த எந்த நன்றியை மறந்தாலும் காலத்தினால் செய்த உதவியை நாம் மறக்கலாமா?

இனி அங்குவாழ் தமிழர்களுக்குநிரந்தரமாகஆலயத்தைவாங்குவதற்குஅவ்வூர்இந்நாட்டுவாசிகளின்எதிரான கருத்துக்கள் தான் மேலோங்கி நிற்கப் போகின்றது.

தமிழர்கள் என்றால் பெருமைக்குரியவர்கள் என்ற காலம் மலையேறிப்போய் சிறுமைக்குரியவர்கள்என்ற கருத்துக்கள் தான் விதைகளாக விதைக்கப் பட்டுள்ளன. எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்ய முடியும்.

உலகவரலாற்றில் வன்முறையால் தீர்வு கண்டதாக சரித்திரம் இல்லை. எந்தஒருபிரச்சனையும்ஒழுங்காகவும், அமைதியாகவும்ஒருவரையொருவர்புரிந்துணர்வுடன்தான் பேசி தீர்வு கண்டுள்ளார்கள்.

நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதன்மூலமாகவும்பல ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பாராதுபொதுத்தொண்டு புரிபவர்களுக்கு இவ்வாறான செய்கைகள் மன விரக்தியை உருவாக்கிஅவர்களை மன நோயாளிகளாக அவர்களின் வாழ்வை மாற்றக் கூடிய சாத்தியக் கூறுகளும் ஏற்படலாம்.

இந்து மதத்தில் உள்ள கர்ம காண்டம் என்னும் பகுதியில் மனம், வாக்கு, காயம் இந்த மூன்றினாலும் மற்றவர்களுக்குசெய்கின்ற தீங்குகள் மீண்டும் செய்தவர்களுக்குபல மடங்காக போய்ச் சேரும் என்று கூறுகின்றது.

ஆகவேஅவ்வாலாயத்தில் அமைதியை உருவாக்கி மானுடப் பிறப்பின் மகத்தான நோக்கத்தையும்இ நாம் இவ்வுலகத்தில் மானிடர்களாக பிறந்ததின் மகத்துவத்தையும் காப்பாற்றுவோமாக.