இலங்கையில் தாயும் மகளும் செய்த அதிர்ச்சி செயல்!

புத்தளம் – மல்லிபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமது பிள்ளைகளுடன் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தாயொருவரின் வயது 40 என்பதோடு, மகளுக்கு 18 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் குறித்த தாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் அளவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் அதே பகுதியில் ஆறு மாதங்களான தனது குழந்தையுடன் ஹரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் புத்தளம் ஊழல் ஒழப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like