சில பெண்கள் இணைந்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பதுக்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் பதுக்கை நகரிற்கு கொள்வனவிற்காக வருகை தரும் பெண்களை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
பதுக்கை நகரிற்கு வருகை தரும் பெண்களின் கைப்பைகளை கொள்ளையிடுவதற்காக குறித்த பெண்கள் திட்டமிட்டு செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கொள்ளை சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட பெண்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சீ. சீ.ரீ.வி பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.