தூக்கில் தொங்கிய பிரபல இளம் நடிகை: ஏமாற்றிய காதலனின் பகீர் வாக்குமூலம்

நடிகை நாக ஜான்சி தற்கொலை செய்த வழக்கில் அவர் காதலன் சூர்யாவை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

தெலுங்கு தொலைக்காட்சி நடிகை ஜான்சி கடந்த வாரம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜான்சியின் இம்முடிவுக்கு அவரின் காதலன் சூர்யா என்பவர் தான் காரணம் என பெண்ணின் பெற்றோர் பொலிஸ் புகார் அளித்தனர்.

இது குறித்து பொலிசார் தீவிரமாக விசாரித்த நிலையில் ஜான்சி பேசிய போன் கால்களை ஆராய்ந்ததில் அவர் அதிகப்படியாக காதலர் சூர்யாவிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் சூர்யாவை கைது செய்து விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், ஜான்சியை கடந்த 10 மாதங்களாக மட்டுமே தெரியும். இருவரும் மனம் ஒத்துப் போனதால் காதலித்தோம். ஜான்சி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியதற்கு, என்னுடைய தங்கை திருமணம் முடிந்து காதலைப் பற்றி வீட்டில் சொல்வதாக கூறினேன்.

மேலும் என் தாயார் எனக்கு பெண் பார்ப்பதாக ஜான்சியிடம் கூறியதால், அவர் அதைப் பற்றியே யோசித்து மனமுடைந்து காணப்பட்டார்.

அவருக்கு நான் ஆறு நாட்களுக்கு முன்பு போன் செய்த போது அவர் என்னுடைய போன் கால்களை எடுக்கவில்லை.

பின்னர் வேலையில் நான் மும்முரமாக இருந்ததால், ஜான்சியின் போனை என்னால் எடுக்க முடியவில்லை. எனக்கு பல முறை முயற்சித்தும் போனை எடுக்காததால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், ஜான்சியை தான் ஏமாற்றவில்லை என்று கூறியுள்ளார்

சூர்யா இப்படி கூறினாலும், ஜான்சியின் பெற்றோர் கூறுகையில், சூர்யா ஜான்சியை ஏமாற்றுவது போல் மட்டுமே நடந்து கொண்டார்.

ஜான்சி சம்பாதித்த பணத்தைக்கொண்டு சூர்யாவிற்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்பு கொண்ட இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளதாகவும், திருமணத்துக்குப்பின் நடிக்க கூடாது என வலியுறுத்தியதால் மனமுடைந்து ஜான்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

இதையடுத்து பொலிசார் சூர்யாவை தங்கள் பாணியில் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like