இலங்கை மக்கள் இலங்கை அபிவிருத்திக்கான அரங்க நாடக செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது…

இலங்கை மக்கள் இலங்கை அபிவிருத்திக்கான அரங்க நாடக செயற்திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது…

ஊடகநிலையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடாத்திவரும் இலங்கை மக்கள் அரங்க நாடக செயற்திட்டத்தின் நான்காவது கட்டம், மே மாதம் தொடக்கம் வடமாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இளம் தலை முறையினரிடத்தில் பன்மைத்துவம்,சகிப்புத்தன்மை,வித்தியாசங்களை மதித்தல் மற்றும் அகிம்சையைஊக்குவித்தல் என்பன இம்முறைமக்கள் அரங்கச் செயற்திட்டத்தின் நோக்கங்களாகும்.
முற்றிலும் இலவசமாக இடம்பெறவுள்ள இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மக்கள் அரங்கநாடகக் கலைஞர்கள் மற்றும் கலைக் குழுக்கள் என்பனவற்றுக்கான நிபுணத்துவ மக்களரங்க ஆற்றுகை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணம்,மன்னார்,வவுனியா,கிளிநொச்சிமற்றும் முல்லைத்தீவுஆகியமாவட்டங்களைச் சேர்ந்ததமிழ், முஸ்லிம்,கிறிஸ்தவமற்றும் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்,யுவதிகள்,கலைக்குழுக்கள் என்பன இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக் காலத்தில் மக்கள் அரங்க ஆற்றுகையை சமூகமாற்றத்திற்குப் பயன்படுத்தும் முறைகள் தொடர்பில் பயிற்சி வழிகாட்டல் நூல் ஒன்றையும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகநிலையம் வெளியிடவுள்ளது. இதற்காக கலைக்கழகங்கள் துறைசார் நிபுணர்கள், பயிற்றுவிப்பாளர்கள், பல்கலைக்கழகத்தினர் ஆகியோரின் வழிகாட்டல்களை ஊடகநிலையம் பெற்றுக்கொள்ளஉள்ளது.
சுமார் பத்துவார இறுதிநாட்களில் இடம்பெற உள்ள10 நாள் பயிற்சிகளைத் தொடர்ந்து 40 மக்கள் அரங்குகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொருமாவட்டத்திலும் 10 மக்கள் அரங்கநாடகங்கள் வீதம் அரங்கேற்றப்படும். இதில் கலந்துகொள்ளவிரும்பும் கலைஞர்கள் கலைக்குழுக்கள் எதிர்வரும் மேமாதம் 15ம் திகதிக்குமுன்னர் [email protected] மின்அஞ்சலுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலதிக தெடர்புகளுக்கு

இலங்கை மக்கள் அரங்க நாடக செயற்றிட்ட அதிகாரி AWM. அஸ்ஜைன் ‎0776653694 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…

Get real time updates directly on you device, subscribe now.

You might also like