தற்கொலையா பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், பதறிய மக்கள்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு பிரபல பெங்காலி நாளிதழில் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

சில நாட்கள் முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியில் யாஷிகாவின் புகைப்படத்துக்கு பதில் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டுவிட்டனர்.

“What the hell :O” என யாஷிகா ஆனந்த் ட்விட்டரில் கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை கொடுத்து பிறகு யாஷிகா டுவிட் செய்தவுடன் தான் நிம்மதியடைந்தனர்.

Get real time updates directly on you device, subscribe now.

You might also like