காதல் விவகாரம்! யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு

உனைவிட்டு தொலைதூரம் செல்லப்போகிறேன்’ என நண்பருடன் அலைபேசியில் கதைத்தவாறு, ரயில் முன்பாக பாய்ந்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

ரயிலுடன் மோதுண்ட இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கச்சாயைச் சேர்ந்த மகாலிங்கம் ஜெயரூபன் (வயது 21) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காதல் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென கொடிகாமம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.