நான் தமிழனாக பிறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியிருப்பேன் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசனிடம் இதனை ஞானசாரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூலில் இந்த தகவலை பதிந்துள்ளார்.
‘நான் சிங்கள பெளத்தனாக பிறந்திட்டதால், எனது இனத்திற்காக போராடி இப்போது சிறையில் இருக்கிறேன். நான் முல்லைத்தீவில் பிறந்திருந்தால் ஒரு தமிழனாக போராடி ஒரு தமிழ் புலியாக இதே சிறையில் இருந்திருப்பேன் என்று ஞானசாரர் நேற்று என்னிடம் சொன்னார்“ என மனோ கணேசன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.






