வெளிநாடு ஒன்றில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் பரிதாபமாக பலி

ஓமான் நாட்டில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் நான்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த கணவனும் இன்றுமொரு பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் வேறொரு குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக தெரியவருகிறது.