மாணவர்கள் கண்முன்னே ஆசிரியையை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

தமிழகம் – கடலூர் மாவட்டத்தில் பாடசாலைக்குள் ஆசிரியர் ரம்யாவை கழுத்தறுத்து கொலை செய்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் குறிஞ்சிப்பாடியில் சேர்ந்த ஆசிரியை ரம்யா கடந்த வெள்ளிக்கிழமை வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் ராஜசேகர் என்ற இளைஞரால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தின் பின் ராஜசேகர் தலைமறவாகி இருந்தார். இந்த கொலை தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஒரு தலைக் காதலால் ரம்யா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

விருதைக்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்ற இளைஞர் ரம்யாவை ஒரு தலையாக காதலித்ததாகவும், அவரது பெற்றோரிடம் சென்று பெண் கேட்டதாகவும் பெற்றோர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ராம்யா கிடைக்காத விரக்தியில் அவரை கொலை செய்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் ராஜசேகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்ட நிலையில் ராஜசேகரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றி பொலிசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.