யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடி மத்தி கைதடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது தாயார் இறந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், மன உளைச்சல் காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பரிசோதனைக்காக சாவகச்சேரி மருத்துவமனை சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது.