யாழில் நபர் ஒருவருக்கு திடீரென தலைசுற்றியதால் ஏற்பட்ட விபரீதம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு வாந்தி எடுத்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

அதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து எதிரே வந்த ஈருருளியுடன் மோதியது.

உந்துருளியில் பயணித்தவரும் சைக்கிளில் பயணித்த முதியவரும் காயங்களுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரி சங்கத்தானை ஆசிரியர் சாலையைச் சேர்ந்த நபருக்கு, மோட்டார் சைக்கிளில் பயணித்த போது திடீரென மயக்கம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் மறுகரைக்குச் சென்று அவ்வழியே வந்த சைக்கிளை மோதியுள்ளது.

சைக்கிளில் பயணித்த மீசாலை மேற்கு பங்களா சாலையைச் சேர்ந்த முதியவர் காயமடைந்தார்.

காயமடைந்த இருவரும் அயலவர்களால் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.