ஐரோப்பிய நாடான இத்தாலியில் இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ரோம் நகரின் இன்பர்னேன்த்து பிரதேசத்தில் சேவை செய்த இலங்கையர் ஒருவரே திடீர் மரணமடைந்துள்ளார்.
குறித்த இலங்கையர் மரத்தின் கிளை ஒன்றை வெட்டி கொண்டிருந்த போது அதில் இருந்து விழுந்துள்ளார்.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டவர் ஒரு வார சிகிச்சையின் பின்னர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நைனமடம் தல்தென பிரதேசத்தை சேர்ந்த 57 வயதான பாலித பெர்னாண்டோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இத்தாலி நாட்டிற்கு சொந்தமான பூங்காவில் பணியாற்றும் போதே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
மரத்திலிருந்து விழுந்த அவரது தலை பகுதியில் பாரிய காயம் ஏற்பட்டிருந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றனர்.






