மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் இளம் புத்தக கடை முதலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது கடையினுள் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
வீசி வீதி வந்தாறுமூலையைச், சேர்ந்த 24 வயதுடைய அரசமணி தனுஷன் என்பவரே இவ்வாறு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

வந்தாறுமூலை பிரதான வீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அண்மையில் உள்ள புத்தக கடை ஒன்றை நடாத்திவரும் குறித்த இளைஞன் சம்பவதினம் நேற்று இரவு கடையில் தங்கி வேலைசெய்துவிட்டு வருவதாக கடைக்குச் சென்றவர்
இன்று காலையில் கடையினுள் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து பொலிஸாரர் சடலத்தை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்






