சோறு தொண்டைக் குழியில் சிக்கியதன் காரணமாக 21 மாத வயதைக் கொண்ட ஆண் சிசுவொன்று உயிரிழந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் பாலையடித்தோணா கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார் நீஷான் என்ற குழந்தையே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளது.
வழமை போன்று உணவு உட்கொண்டிருந்த குழந்தை விக்கல் ஏற்பட்டதன் காரணமாக அவஸ்தையுற்று சற்று நேரத்தில் குழந்தை அசைவற்றுக் காணப்பட்டுள்ளது.
பெற்றோர் குழந்தையை அருகிலுள்ள சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குழந்தை ஏற்கெனவே உயிர் பிரிந்திரிந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
குழந்தைகளை பொருத்தவரை அந்த மாதத்தில் தானாகவே உடலியல் செயற்பாட்டை குழந்தைகள் வெளிப்படுத்தும் ஆனால் பெற்றோர் அதற்கு முன்னர் குழந்தைகளிடம் எதிர்ப்பார்ப்பது ஆபத்து உதாரணத்திற்கு குழந்தைகளுக்கு இயல்பாகவே விழுங்கி உறிஞ்சும் பொறிமுறை நரம்பு வளர்ச்சியடைய முன் சோறு, கிழங்கு வகை மற்றும் பெற்றோர் உண்ணும் கொத்துரொட்டி வழங்க எத்தனிக்க கூடாது.
அப்படி முயற்சி செய்தால் உணவு விழுங்கப்படாமல் தொண்டைக்குழியில் சிக்கி இறக்க நேரிடும்,அதே போன்று குழந்தைகளுக்கு நோய் வரும் போது ஆரம்ப பருவத்தில் டியூப் குளிசை ,பனடோல் மாத்திரை கூட வைத்தியர் வழங்குவதில்லை.மெல்லிய பாணி திரவ மருந்துவகைகளை வழங்குவார்கள்.






