பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் வெளியாகவுள்ள இலங்கையின் புதிய வரைப்படம்!

பல்வேறு மாற்றங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி பணிகள் காரணமாக இலங்கையின் நில அளவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை தொடர்ந்து புதிய வரைபடம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர திட்டம், ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டம், மொரகஹந்த அபிவிருத்தி திட்டம் ஆகியன இலங்கையின் நில அளவில் மாற்றம் ஏற்பட பிரதான காரணங்களாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பிற அபிவிருத்தி திட்டங்கள் புதிய வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய வரைபடங்கள் செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. முந்தைய வரைபடங்கள் வான்வழி புகைப்படங்களின் உதவியுடன் தொகுக்கப்பட்டது.

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடம் மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்படும்” என நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த மேலும் தெரிவித்துள்ளார்.