கொழும்பு – கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் பயணித்த ரயிலில் இன்று காலை மோதுண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு – கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி மற்றும் மாணவன் மோதுண்டுள்ளனர்.
லலங்க ஹர்ஷ குமார மற்றும் பியுமி பாக்யா செவ்வந்தி என்ற மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரழந்துள்ளனர்.
ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த மாணவன் மாணவி ஒருவருடன் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மற்றுமொரு மாணவி அவ்விடத்தில் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார்.
இதன் போது எல்ல நோக்கி பயணித்த ரயிலை அவதானித்த மாணவன் தன்னுடன் இருந்த மாணவியை காப்பாற்றிவிட்டு மற்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.