காதல் வார்த்தை கூறி சிறுமிகளுக்கு 3 இளைஞர்கள் செய்த காரியம்! யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இளம் பெண்களை ஏமாற்றிய 3 இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காதலிப்பதாகத் தெரிவித்து 13 மற்றும் 14 வயதுச் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்து குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என்று அவரது தாயார் முறைப்பாடு செய்திருந்தார்.

மறு நாள் சிறுமி வீதியால் சென்றதைக் தயார் கண்டுள்ளார். சிறுமியை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தினார். அவரை விசாரணைக்கு உட்படுத்தியபோது, காதலிப்பதாகத் தெரிவித்து தாவடியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை தெரிய வந்தது.

சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளைஞனைக் கைது செய்துள்ளோம்.

கடந்த 24ஆம் திகதி 13வயதுச் சிறுமி உறவினர் வீட்டுக்குச் சென்று இரவு தாமதமாகி வந்துள்ளார். அவரிடம் தாயார் விசாரித்தபோது, சுன்னாகத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞன் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளார்.

தாயார் முறைப்பாடு செய்தார். சிறுமியிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைவாக 18 வயதுடைய இளைஞனைக் கைது செய்தோம்.

இதேவேளை, இந்தச் சிறுமியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுன்னாகத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் துர்நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

அதனையும் அவர் இப்போது விசாரணைகளின்போது கூறியுள்ளார். அதனையடுத்து அந்த இளைஞனையும் கைது செய்துள்ளோம் என்று சுன்னாகம் பொலிஸார் குறிப்பிட்டனர்.