யாழில் சந்ததி பெருக்கி சாதனை படைத்த பாட்டி காலமானார்!

126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி ஒருவர் காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம் என்பவரே இவ்வாறு காலமாகியுள்ளார்.

இவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர்.

இவருக்கு 12 பிள்ளைகளும், 52 பேரப்பிள்ளைகளும், 61 பூட்டப் பிள்ளைகளும், 1 கொள்ளுப் பிள்ளையும் உள்ளனர்.

இவர் தனது 87 வயதில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.