ஆவா குழுவின் இராச்சியமாகியதா யாழ்ப்பாணம்? நள்ளிரவில் மர்ம நபர்களின் செயல்

யாழ்ப்பாணத்தில் வீதி நடுவே ஆவா குழுவின் இராச்சியம் என்ற வாசகம் நேற்றிரவு முதல் எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

யாழ். செம்மணி பிரதான வீதியிலேயே இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த வாசகம் எழுதப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் சம்பவம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.